வடகிழக்கு இந்தியாவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் சாவு
2022-11-23 10:29:00

அசாம் மற்றும் மேகாலய மாநில எல்லைக்கு அருகே பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக மேகாலய முதல் அமைச்சர் கான்ரட் சங்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மேகாலயாவின் மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் பொதுமக்கள் கூட்டத்தின் மீது அசாம் காவல்துறை மற்றும் அசாம் வனப் பாதுகாப்புத் துறையினர் இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளனர்.

ஊடகங்களின் தகவல்படி அசாம் காவல்துறை மற்றும் அசாம் வனப் பாதுகாப்புத் துறை மேகாலய மாநிலத்துக்குள் ஒரு லாரியைப் பின்தொடர்ந்து சென்றபோது. பெரிய அளவிலான கூட்டம் திரண்டது. பின்னர் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தினர்.

இதற்கு, மேகாலய மாநில அரசு கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளது.