நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சொலமன் தீவுகளுக்கு ஷிச்சின்பிங் ஆறுதல் செய்தி
2022-11-25 20:13:16

சொலமன் தீவுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதைக் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 25ஆம் நாள் சொலமன் தீவுகளின் தலைமை ஆளுநர் டேவிட் வுனகிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

ஆறுதல் செய்தியில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சொலமன் தீவுகளின் அரசு மற்றும் மக்களுக்கு ஆறுதலைத் தெரிவிக்கிறேன். சீனாவும் சொலமன் தீவுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு மற்றும் உதவியளிக்கும் நல்ல நண்பர்கள், நல்ல சகோதர்கள் மற்றும் நல்ல கூட்டாளியாகவும் விளங்குகின்றன. சொலமன் தீவுகளின் மக்கள் இயற்கை சீற்றத்தைத் தோற்கடித்து வீட்டை மறுசீரமைப்பதற்குச் சீனா இயன்ற அளவில் உதவியளிக்க விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.