கரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய உலக ஆய்வறிக்கை
2022-11-27 16:44:05

கரோனா வைரஸ், உலகளவில் பரவி வருகின்றது. இவ்வாண்டில் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த மக்கள் தொகை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இப்போது கரோனா வைரஸ் தொடர்ச்சியாக உருமாறி வருகின்றது. அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் உலக இணைய பயனர்களிடம் நடத்திய ஆய்வின் படி, கரோனா வைரஸ் மனிதரின் ஆரோக்கியத்தை நீண்டகாலமாக பாதிக்கும் என்று 60.44 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். நடவடிக்கை மேற்கொண்டு இவ்வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று 85.4 விழுக்காட்டினர் கருத்துகின்றனர்.

பல்வேறு நாடுகள், கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கண்காணித்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு ஆலோசனை செய்தது.