அமெரிக்காவில் துப்பாக்கி சம்பவங்களில் உயிரிழப்பு அதிகம்
2022-11-27 15:51:53

அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம்(gun violence archive)என்னும் இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நவம்பர் 26ஆம் நாள் வரை, இவ்வாண்டு அமெரிக்காவில் துப்பாக்கி சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆண்டுகளாக 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், 35 ஆயிரத்துக்கும் மேலானோர் துப்பாக்கி சம்பவங்களில் காயமுற்றனர். நவம்பர் 26ஆம் நாள் வரை, குறைந்தது 4 உயிரிழப்புகளை ஏற்படுத்திய 611 பெரிய அளவிலான துப்பாக்கி சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆண்டுகளாக 600ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.