அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் கூற்றுக்கு எதிர்ப்பு:சீனா
2022-12-02 18:46:49

நவம்பர் 30ஆம் நாள் நடைபெற்ற நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்தப்பில், சீனா கொண்டு வந்துள்ள அறைக்கூவல்களை நேட்டோ தெளிவான சிந்தனையுடன் எதிர்கொள்கின்றது என்றும், சீனா கட்டாயக் கொள்கையைச் செயல்படுத்தி, பொய் தகவல்களைப் பரப்புவதில் அமெரிக்கா கவனம் செலுத்துவதாகவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லீ ஜியன் டிசம்பர் 2ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கத் தரப்பின் கூற்றில், சரி மற்றும் தவறு குழப்பமாகக் கொள்ளப்பட்டு, பனி போர் சிந்தனையும் தவறான புரிதலும் நிறைந்துள்ளது. உண்மையில், ஆயுத அச்சுறுத்தல், அரசியல் தனிமைப்படுத்தல், பொருளாதாரத் தடை, தொழில் நுட்பத்துக்கான முற்றுகை உள்ளிட்ட செயல்களை அமெரிக்கா இடைவிடாமல் மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

மேலும், சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒருமித்த கருத்துக்களை அமெரிக்கா செயல்படுத்தி, இரு பெரிய நாடுகள் சரியாக பழகும் முறையை சீனாவுடன் இணைந்து உருவாக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.