நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8 விழுக்காடு உயர்வு
2022-12-03 17:10:26

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8 விழுக்காடாக  உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

வேலையின்மை விகிதம் 30.6 விழுக்காட்டுடன், வட மாநிலமான ஹரியானா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அண்டை மாநிலமான ராஜஸ்தான் 24.5 விழுக்காட்டுடன் அடுத்த இடத்தில்  உள்ளது.

நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.96 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 7.55 விழுக்காடாகவும் உள்ளது என்று தரவுகள்  காட்டுகின்றன.

அக்டோபரிர் மாதத்தில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.21 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 8.04 விழுக்காடாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.