சீன-அரபு நாடுகள் உறவின் வளர்ச்சியில் மாபெரும் மைல்கல்
2022-12-07 17:12:03

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 7 முதல் 10ஆம் நாள் வரை சௌதி அரேபியவின் லியாட்டில் சீனா-அரபு நாடுகள் உச்சிமாநாடு மற்றும் சீன-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவும், சௌதி அரேபியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவும் உள்ளார்.

அது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 7ஆம் நாள் கூறுகையில், சீன-அரபு நாடுகள் உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங்கின் பங்கெடுப்பு, நவ சீனா உருவாக்கப்பட்டது முதல் இதுவரை, அரபு நாடுகளுடனான மிக பெருமளவிலான மற்றும் மிக உயர்நிலையிலான தூதாண்மை நிகழ்வாகும். இது, சீன-அரபு நாடுகள் உறவின் வளர்ச்சி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக மாறும் என்று தெரிவித்தார்.