2022ஆம் ஆண்டு சீனாவின் முக்கிய வணிகச் செய்திகள்
2022-12-27 12:17:54

2022ஆம் ஆண்டு சீனாவின் முதல் 10 முக்கிய வணிகச் செய்திகளை சீன ஊடகக் குழுமம் டிசம்பர் 26ஆம் நாள் வெளியிட்டது. இவற்றில், முதல் 5 முக்கிய செய்திகள் பின் வருமாறு—

1.     சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று, நவீன சோஷலிச நாட்டை பன்முகமாகக் கட்டியமைக்கும் புதிய பயணத்தை சீனா தொடங்கியுள்ளது.

2.     நோய் தொற்றுக் கட்டுப்பாட்டையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் சீனா உயர் பயனுள்ள முறையில் ஒருங்கிணைத்து, 1 கோடியே 20 லட்சம் கோடி யுவானுக்கு மேலான மொத்த பொருளாதார மதிப்பை நனவாக்க உள்ளது.

3.     உலகளவில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை புதிய பதிவாகியுள்ளது. சீனாவில் பனிப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இதனால் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

4.     சீனாவின் தாணிய விளைச்சல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக 65 கோடி டன்னைத் தாண்டி, குடிமக்களின் உணவு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

5.     சீனாவின் நிலக்கரி உற்பத்தி அளவு வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியதோடு, கச்சா எண்ணெய் உற்பத்தி 20 கோடி டன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவின் புதுப்பிக்கவல்ல ஆற்றலின் மின் உற்பத்தி திறனும் வேகமாக அதிக்கரித்து, பொருளாதார மற்றும் சமூக வளரச்சிக்கு வலுவான ஆதரவளித்துள்ளது.