2023இல் உலகப் பொருளாதார வளர்ச்சி 1.7விழுக்காடாக குறைவு
2023-01-11 14:32:20

2023ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பை உலக வங்கி பெருமளவில் குறைத்துள்ளது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் ஜனவரி 10ஆம் நாள் அறிவித்தது.

உலக வங்கியின் கணிப்பீட்டின்படி, 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 1.7விழுக்காடாக குறையும். 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், 3விழுக்காடு வளற்ச்சி அடையுமென கணிக்கப்பட்டது. உலகளாவிய பணவீக்கம் தணிவடைந்தாலும், இன்னும் வரலாற்று உயர்ந்த பதிவில் நிலவியுள்ளது. மேலும், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷிய-உர்கைன் மோதல் உள்ளிட்ட காரணிகள் உலகப் பொருளாதாரத்துக்கு இன்னும் அச்சுறுத்தலாக இருக்கும்.