உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளி நிகழ்ச்சி
2023-01-21 16:06:10

ஐக்கிய அரபு அமீகத்தின் துபாய் நகரில் புகழ்பெற்ற கட்டிடச் சின்னமாகவும் உலகின் மிக உயரமான கட்டடமுமான புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் 20ஆம் நாளிரவில் வசந்த விழா குறித்த ஒளி நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. உலகளவில் சீனர்களுக்கு வசந்த விழா வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சீன ஊடகக் குழுமம் தொடர்ச்சியாக 4ஆவது ஆண்டில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

மேலும், சீன புத்தாண்டு விழாவை ஒட்டி ஐரோப்பியாவில் மிக உயரமான கட்டிடமான ரஷ்யாவின் மாஸ்கோவிலுள்ள ஓஸ்டான்கினோ தொலைக்காட்சி கோபுரத்தில் ஒளிகும் இனிய முயல் ஆண்டு நல்வாழ்த்தைக் கண்டு ரசிக்கலாம். சீன ஊடக குழுமத்தின் வசந்த விழாவுக்கான இரவு கலை நிகழ்ச்சியின் சின்னமான “டூயுவான்யுவான்” இந்த கோரபுரத்தில்  உள்ளுர் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல்முறையாகும்.