அரசுப் பணியறிக்கையின் வரைவு பற்றி கருத்துக்களைக் கேட்டறிந்தார் லீ கெச்சியாங்
2023-02-08 10:40:25

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் பிப்ரவரி 6ஆம் நாள் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, அரசுப் பணியறிக்கையின் வரைவு பற்றி பல்வேறு துறையினர்கள் மற்றும் அடிமட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் லி கெச்சியாங் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். அவர் கூறுகையில், கடந்த ஓராண்டில் சீனாவின் வளர்ச்சி எளிதில் எட்ட முடியாத புதிய சாதனையை அடைந்துள்ளது. எதிர்பாராத பல காரணிகளின் கடும் தாக்கத்தை எதிர்கொண்ட போதிலும், உரிய கொள்கை மற்றும் நடவடிக்கைகளின் மூலம், பொருளாதாரத்தை நியாயமான வரம்புக்குள் இயங்கச் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் சீனா பெரும் வளர்ச்சி சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அழுத்தம்பட தெரிவித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் தொற்று நோய் பாதிப்பு இருந்தாலும், சீனப் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 5.2 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீராக நடைமுறைப்படுத்தி, பொருளாதார மீட்சியை வலுப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.