போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டம்
2023-02-17 10:56:16

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2023ம் ஆண்டு கூட்டம் மார்ச் 28ம் நாள் முதல் 31ம் நாள் வரை ஹைனான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெறவுள்ளது. “உறுதியற்ற உலகில் ஒற்றுமை ஒத்துழைப்புடன் சவாலை எதிர்கொண்டு, திறப்பு மற்றும் உள்ளடக்கத் தன்மையுடன் வளர்ச்சியை முன்னெடுப்பது”என்பது, இவ்வாண்டின் தலைப்பாகும்.

நேர்முக முறையில் நடத்தப்படும் இக்கூட்டத்தில், அரசியல், வணிகம், கல்வி, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பன்னாட்டுப் பிரதிநிதிகள் பங்கெடுக்கவுள்ளனர். இப்பிரதிநிதிகள் நடப்புத் தலைப்புடன், “வளர்ச்சியும் பொது நலன்களும்”,“மேலாண்மையும் பாதுகாப்பும்”,“பிராந்தியமும் உலகமும்”,“தற்போதும் எதிர்காலமும்”ஆகிய 4 தலைப்புகள் சார்ந்து  சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்து, உலகின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்கவுள்ளனர்.