ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நேட்டோவில் இணைவது குறித்த பேச்சுவார்த்தை
2023-03-10 16:35:17

ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து, ஸ்வீடன், ஃபின்லாந்து, துருக்கி ஆகிய 3 தரப்புகளும் 9ஆம் நாள் பெல்ஜியம் தலைநகர்  பிரஸ்ஸல்ஸில் பேச்சுவார்த்தை நடத்தின. இப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இருப்பினும், வரும் ஜுலை திங்களுக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முத்தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

புதிய உறுப்பு நாடுகளைச் சேர்ப்பதற்கு நேட்டோவின் 30 உறுப்பு நாடுகள் அனைத்தும்  ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது, துருக்கி, ஹங்கேரி ஆகிய இரு நாடுகளும் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை.