பிரேசில் அரசுத் தலைவரின் மனைவியுடன் பெங் லியுவான் சந்திப்பு
2023-04-15 17:30:45

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரேசில் அரசுத் தலைவர் லுலா டா சில்வாவின் மனைவி ரோசாங்ஜெலாவைச் சந்தித்துரையாடினார்.

சீனாவின் வரலாறு மற்றும் பண்பாட்டையும் பல்வேறு இடங்களின் தனிச்சிறப்புகளையும் பெங் லியுவான் ரோசாங்ஜெலாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த சீனப் பயணத்தில் அதிக சாதனைகள் படைக்க வேண்டும் எனவும் சீன-பிரேசில் நட்புறவு நீண்டகாலமாகவும் உறுதியாகவும் வளர்க்க வேண்டும் எனவும் பெங் லியுவான் வாழ்த்து தெரிவித்தார்.

சீனாவில் முதல்முறையாக பயணம் மேற்கொண்ட போதிலும், நீண்டகால வரலாறு மற்றும் உயிராற்றல் மிக்க நாடாக சீனா விளங்குவதை உணர்வதாக ரோசாங்ஜெலா தெரிவித்தார். சீனா பற்றிய புரிந்துணர்வை மேலும் ஆழமாக்கி இரு நாடுகளிடையே உள்ள நட்புறவையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றுவதற்கு பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.