காபோன் அரசுத் தலைவரின் மனைவியுடன் பெங் லியுவான் சந்திப்பு
2023-04-20 20:16:30

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான் ஏப்ரல் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் காபோன் அரசுத் தலைவர் அலி பாங்கோ ஒண்டிம்பாவின் மனைவி சில்வியா அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.

பொது நலன்ப்பணிகளில் நீண்டகால ஆர்வம் கொண்ட சில்வியாவுக்கு பாராட்டு தெரிவித்த பெங் லியுவான், எய்ட்ஸ் நோய், காச நோய், கோவிட்-19 தொற்று நோய் ஆகியவற்றை எதிர்த்து போராடுவதில் சீனா எடுத்த முயற்சிகளை அறிமுகம் செய்தார்.

சில்வியா கூறுகையில், சீனாவின் வெற்றி அனுபவங்களை கற்று கொண்டு, சீனாவுடான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.