சீன-ஹோண்டுராஸ் தூதாண்மை உறவு வளர்ச்சி
2023-06-06 17:04:01

ஹோண்டுராஸிலுள்ள சீனத் தூதரகத்தின் திறப்பு விழா ஜுன் 5ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்றது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 6ஆம் நாள் கூறுகையில், அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவது, நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்குவது, பொது மக்களின் நட்புறவை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு ஹோண்டுராஸிலுள்ள சீனத் தூதரகம் பாலமாக அமையும் என்று தெரிவித்தார். இதனிடையே, சீனாவிலுள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தின் கட்டுமானப் பணியை ஹோண்டுராஸ் தரப்பு முன்னேற்றி வருகிறது. இதற்கு சீனா பெரும் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சீன-ஹோண்டுராஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, இருதரப்பும் குறிப்பிட்ட வாக்குறுதிகளை உறுதியுடன் செயல்படுத்தி, இருநாட்டுறவின் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றி வருவதில், பல சாதனைகள் பெறப்பட்டுள்ளன. ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றுவது, சர்வதேச நேர்மை, பொது மக்களின் விருப்பம் மற்றும் கால ஓட்டத்துக்கு ஏற்றதாகும் என்பதையும், சீன-ஹோண்டுராஸ் தூதாண்மை உறவின் உருவாக்கம், இருநாட்டு மக்களின் நலனுக்குப் பொருத்தமாக இருப்பதையும் இது காட்டுகிறது என்றும் வாங் வென்பின் குறிப்பிட்டார்.