ஜப்பான் அரசின் சட்ட விரோதமான செயலுக்கு அந்நாட்டின் பொது மக்கள் எதிர்ப்பு
2023-09-09 18:55:15

ஜப்பான் அரசு மற்றும் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் தன்னிசையாக கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றுவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டின் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஃபுகுஷிமா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, இச்செயலை நிறுத்த கோரி வலியுறுத்தியுள்ளனர். ஜப்பானில் கதிரியக்க நீர் வெளியேற்றத்துக்கு எதிரான முதலாவது வழக்கு தாக்கல் இதுவாகும். ஜப்பான் தலைமை அமைச்சரின் மீது குடிமக்கள் குழுக்கள் குற்றஞ்சாட்டிய பிறகு, அந்நாட்டின் பொது மக்கள் சொந்த உரிமை நலன்களை பேணிக்காக்கும் விதம் மீண்டும் சட்ட உதவியை நாடியுள்ளனர்.

ஆனால், நம்பமுடியாததாக, பிரதிவாதியாக இருக்கும் ஜப்பான் அரசு, வாதியாக நடித்து, உலக வர்த்தக அமைப்பிடம் சீனா மீது குற்றஞ்சாட்டி, ஜப்பானிலிருந்து நீர்வாழ்வன பொருட்களின் மீதான இறக்குமதி தடையை நீக்குமாறு கோரியது. இது குறித்து ஜப்பானின் குடிமக்கள் குழு ஒன்றின் பொறுப்பாளர் காவ்ரு இவாட்டா கூறுகையில், தன் மீதான கவனத்தை மாற்றும் வகையில் ஜப்பான் அரசு இவ்வாறு செய்ததோடு, தன் செயலால் பாதிக்கப்பட்ட தரப்பின் மீதும் பழி தூற்றியதாகவும், கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற தரப்பு மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜப்பான் அரசு எவ்வாறு நடித்தாலும், ஜப்பானின் மீன்பிடித் தொழில் மற்றும் பொருளாதாரத்துக்கு இழப்பையும், உலக கடல் சூழல் மற்றும் பொது மக்களின் உடல்நலத்துக்கு பெரும் ஆபத்தையும் ஏற்படுத்திய குற்றவாளி யார் என்பதை ஜப்பானியர்களும் உலக மக்களும் தெளிவாக தெரிந்து கொண்டுள்ளனர். அந்நாட்டின் மீது பல்வேறு தரப்புகளும் சட்டப்படி குற்றஞ்சாட்டி, அது தனது செயலுக்குப் பொறுப்பேற்கச் செய்வது சிறந்த நிரூபமாகும்.