காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா ஆற்றியுள்ள பங்குகள்
2023-12-12 15:02:16

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா சிறப்பாக செயல்பட்டுள்ளது. சீனா சரியான பாதையில் முந்திசென்று கொண்டிருக்கிறது. துபாயில் நடைபெற்று வருகின்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.வின் 28ஆவது உச்சி மாநாட்டில், உலக வானிலை அமைப்பின் தலைவர் அப்துல்லா அகமது அல்மண்டஸ் அத்தகைய மதிப்பீட்டை மேற்கொண்டார். நீண்டகாலமாக, உலகளாவிய காலநிலை மேலாண்மையை முன்னேற்றுவதில், சீனா 5 அடையாளங்களைக் கொண்டு பணியாற்றி வருகின்றது. சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது அடையாளத்தைப் பொறுத்தவரை, பல வளரும் நாடுகளிலுள்ள முக்கிய உறுப்பு நாடாக சீனா திகழ்கின்றது.

இரண்டாவதாக ஏற்கும் வரலாற்று பொறுப்பு மாறாமல் புதிதாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக சீனா திகழ்கின்றது. உள்ளபடியே கூறினால், வரலாற்றில் சீனாவின் கார்பன் வெளியேற்ற அளவு மற்றும் தனிநபர் கார்பன் வெளியேற்றத்தின் மொத்த அளவு ஆகிய இரண்டும் முக்கிய வளர்ந்த நாடுகளை விட மிகக் குறைவு.

மூன்றாவதாக, எரியாற்றல் பயன்பாட்டின் மேம்பாட்டிக்கு முக்கிய பங்களிக்கும் நாடாக சீனா திகழ்கின்றது. நீண்டகாலமாக, படிம அல்லாத எரியாற்றலுக்கான பெரிய அளவிலான வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை முன்னேற்றச் சீனா பாடுபட்டு, ஆற்றல் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. 2023ஆம் ஆண்டின் அக்டோபரில் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மூலம் மின்சார உற்பத்தியின் மொத்த அளவு 140 கோடி கிலோவாட்டைத் தாண்டி, மொத்த மின்சார உற்பத்தியில் 49.9 விழுக்காடாகும். தொடர்ந்து பல ஆண்டுகளில் உலகின் முதலாவது இடத்தை வகிக்கின்றது.

மேலும், தொழில்நுட்பப் புத்தாக்க அளவைச்  சீனா தொடர்ந்து அதிகரித்து, புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் பயன்பாட்டுச் செலவுகளில் பெருமளவுக் குறைப்பை முன்னேற்றியுள்ளது. 2023ஆம் ஆண்டில் ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள் தொகுதியின் விலை கிலோவாட்டுக்கு  1,000 யுவான் வரை குறைந்தது. இது, 2010ஆம் ஆண்டை விட 90 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது.

நான்காவதாக, பொருளாதாரம் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் என ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் நாடாக சீனா திகழ்கின்றது. "காற்று மாசுப்படுவதைத் தடுக்கும் செயல் திட்டம்"," மாசு மற்றும் கார்பன் குறைப்பைச் செயல்படுத்தும் திட்டம்", "சுழற்சி முறை சார் பொருளாதார மேம்பாட்டு சட்டம்" முதலிய பல சட்டங்களையும் கொள்கைகளையும் 2013ஆம் ஆண்டு முதல், சீனா முறையே வெளியிட்டது. பொருளாதாரம், சமூக மற்றும் சூழலின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அவை முன்னேற்றியுள்ளன.

இதைத் தவிர, காலநிலை மாற்றத்தில் தெற்கு தெற்கு ஒத்துழைப்பைச் சீனா எப்போதும் முன்னேற்றி வருகின்றது. இதுவரை, காலநிலை மாற்றம் குறித்த தெற்கு தெற்கு ஒத்துழைப்பு குறித்த மொத்தம் 57 பயிற்சி வகுப்புகளைச் சீனா நடத்தியது. 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும் காலநிலை மாற்றத்துக்குப் பொருந்திய 75 திட்டங்களையும் சீனா நடத்தியுள்ளது.