அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது
2024-01-04 17:30:15

அண்மையில் நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்தின் குறிப்பை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஜனவரி 3ஆம் நாள் வெளியிட்டது. அதன்படி, தேவை மற்றும் வினியோகம் மேலும் சரிசமமாக இருப்பதையும், உயர் பணவீக்கத்தைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதையும் கடந்த 6 மாதங்களின் தரவுகள் மற்றும் இதர அறிகுறிகள் காட்டுவதாக ஃபெடரல் திறப்பு சந்தை கமிட்டியின் உறுப்பினர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். மேலும், ஃபெடரல் நிதி விகிதம் உச்ச நிலையில் இருக்கலாம். பணவீக்க நிலை தொடர்ந்து குறைந்தால், இவ்வாண்டில் வட்டி விகிதக் குறைப்பைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என கருதப்பட்டுள்ளது.

ஜனவரி 30, 31 ஆகிய நாட்களில் இவ்வாண்டின் முதலாவது நாணயக் கொள்கை கூட்டத்தை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி நடத்த உள்ளது. ஃபெடரல் நிதி விகிதம் தொடர்ந்து 5.25 முதல் 5.5 விழுக்காடு வரையில் இருக்கும் என பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.