தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ்-அமெரிக்க கூட்டு ரோந்து பணிக்கு சீனா எதிர்ப்பு
2024-01-04 18:56:06

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ்-அமெரிக்க கூட்டு ரோந்து பணி குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜனவரி 4ஆம் நாள் கூறுகையில், ஆயுத ஆற்றலை வெளிக்காட்டும் நோக்கத்துடன் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா தென் சீனக் கடலில் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கை, கடல் நிலைமை மற்றும் கடல் சார் சர்ச்சையைக் கட்டுப்படுத்தத் துணைபுரியாது என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட நாடுகள் பொறுப்பற்ற செயல்களை நிறுத்தி, தென் சீனக் கடலில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்காக பிரதேச நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பேணிமதிக்குமாறு சீனா வற்புறுத்துவதாகவும், சொந்த உரிமை பிரதேசத்தின் இறையாண்மை மற்றும் கடல் சார் உரிமை நலன்களை சீனா தொடர்ந்து உறுதியுடன் பேணிக்காத்து, பிரதேசத்தின் அமைதியை ஆக்கப்பூர்வமாக பராமரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.