UNICEF மற்றும் WHO அமைப்பு, தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு ஆதரவு!
2024-01-05 19:20:30

இலங்கையின் தற்போதைய தட்டம்மை பரவலைக்  கட்டுப்படுத்துவதில், இலங்கையின் சுகாதார அமைச்சகத்திற்கு யுனிசெப் எனும் ஐ.நா. குழந்தைகள் நிதியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆதரவளிக்கும் என யுனிசெப் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.       

இலங்கையில் மே மாதத்தில் இருந்து 700 க்கும் மேற்பட்ட தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தட்டம்மை நோய்த்தடுப்புக்கான 

ஒரு துணை நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்றும், இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள்தொகை அடர்த்தி அதிகம் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 6 முதல் 9 மாதக் குழந்தைகளை இலக்காகக் கொண்டு முதல் கட்டம் ஜனவரி 6ஆம் நாள் தொடங்கப்படும். மேலும் இரண்டாம் கட்டம், ஜனவரி 20ஆம் நாள் தொடங்கப்பட்டு நாடு முழுவதிலுமுள்ள பிற வயதினருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.