உலக வானிலை அமைப்பின் முதல் பெண் பொதுச் செயலாளர்
2024-01-05 16:03:59

அர்ஜென்டீனாவைச் சேர்ந்த செலெஸ்டே சவுலோ 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நாள் தொடங்கி, உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார். அவர், இந்த அமைப்பின் முதல் பெண் பொதுச்செயலாளராகவும், தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து முதல் பொதுச்செயலாளராகவும் ஆவார் என்று உலக வானிலை அமைப்பு 4ஆம் நாள் வெளியிட்ட பொது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உலக வானிலை அமைப்பு அதன் தொலைநோக்கை நனவாக்க சவுலோ வழிகாட்டுவார். அனைத்து நாடுகளும், குறிப்பாக மிகவும் பலவீனமான நாடுகள், தீவிர வானிலை, காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் நிகழ்வுகளைச் சமாளிக்க பாடுபடுவார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.