2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நிலைமை மற்றும் கண்ணோட்டம் பற்றிய ஐ.நாவின் அறிக்கை வெளியீடு
2024-01-05 10:15:31

2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நிலைமை மற்றும் கண்ணோட்டம் பற்றிய அறிக்கையை ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகாரப் பிரிவு ஜனவரி 4ஆம் நாள் வெளியிட்டது.

உலகப் பொருளாதார வளர்ச்சி 2023ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட 2.7விழுக்காட்டிலிருந்து  2024ஆம் ஆண்டில் 2.4விழுக்காட்டாக குறையவுள்ளதாக இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டில் பணவீக்க நிலைமை குறையும். ஆனால் உழைப்பு சந்தையின் மீட்சி சமநிலையின்மையாக இருக்கும். உலகின் பணவீக்கம் 2023ஆம் ஆண்டில் இருந்த 5.7விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 3.9விழுக்காடாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளை, பல நாடுகளில் உயர்ந்த விலைவாசி அழுத்தம், தீவிரமாகி வரும் புவிசார் அரசியல் மோதல் முதலிய காரணங்களால், பணவீக்கம் மீண்டும் உயரக் கூடும்.