சீனா-அமெரிக்கா தூதாண்மை:45 ஆண்டு நிறைவு
2024-01-06 17:34:42

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் நாளன்று, சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டுநிறைவாகும். இதையொட்டி, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் பைடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஜனவரி 5ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் ஆணையத்தின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பெய்ஜிங்கில் இதற்காக நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டார்.

கடந்த 45 ஆண்டுகளில் சீன அமெரிக்க ஒத்துழைப்புத் துறை, நலன் ஒன்றிணைப்பு, செல்வாக்கு ஆற்றல் ஆகியவை, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளன. அமைதியானது, சீன-அமெரிக்க உறவுக்கான அடிப்படையாகும். ஒத்துழைப்பானது, இருநாடுகளின் சரியான கூட்டு தேர்வு ஆகும். கூட்டு வெற்றி இருநாட்டுறவில் சாரம்ச ரீதியிலான தனிச்சிறப்பாகும். இவை, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிப் போக்கில் கண்டறியப்பட்ட மூன்று அம்சப்பொருட்கள் என்று வாங்யீ உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில் இரு நாடுகளின் தலைவர்கள் சான்ஃபிரான்சிஸ்கோவில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பை புதிய துவக்கமாகக் கொண்டு, இருநாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய ஒத்த கருத்துக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் வாங்யீ வலியுறுத்தினார்.

சீனாவிற்கான அமெரிக்காவின் தற்காலிக தூதர் டேவிட் மிலே உரை நிகழ்த்திய போது, அமெரிக்க தரப்பின் சார்பில் அமெரிக்க-சீன தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45 ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அமெரிக்கா, இருநாடுகளின் ஒத்த கருத்துக்களை நிறைவேற்றி, இருநாட்டுறவின் சீரான வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டுமென அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.