எல்-1 புள்ளியை அடைந்த ஆதித்யா விண்கலம்
2024-01-07 17:35:05

சூரியனின் வெளிப் பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், இறுதி இலக்கான எல்-1 புள்ளியை சனிக்கிழமை வெற்றிகரமாக அடைந்தது.

எல்-1 எனப்படும் லாக்ராஞ்ஜி புள்ளி -1 இல் இருந்தவாறு சூரியனை ஆதித்யா விண்கலம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புள்ளி புவியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.