அமெரிக்காவின் 5 பாதுகாப்புத் தொழில் நிறுவனங்கள் மீது தடை விதிக்க சீனா முடிவு
2024-01-07 17:30:38

அமெரிக்கா சீனாவின் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதற்கும் சீனத் தொழில் நிறுவனங்கள் மீது தடை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கும் பதிலடியாக, அமெரிக்காவைச் சேர்ந்த 5 பாதுகாப்புத் தொழில் நிறுவனங்கள் மீது தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 7ஆம் நாள் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்காவின் இந்த கடும் தவறான செயல்பாடு காரணமாக, சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டு தண்டனையை எதிர்க்கும் சட்டத்தின்படி, பிஏயி சிஸ்டம்ஸ் லேண்ட் அண்ட் அர்மமென்ட்BAE Systems land and Armament, அல்லியண்ட் டெச்ச்யஸ்டேன்ஸ் ஆபரேஷ ன்Alliant Techsystems Operation, ஏரோவிரோன்மெண்ட் (AeroVironment) உள்ளிட்ட 5 அமெரிக்கத் தொழில்நிறுவனங்கள் மீது தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. சீனாவில் உள்ள அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பிற சொத்துக்கள் ஆகியவை முடக்கப்படும் என்றும், சீனாவில் எந்த நிறுவனங்களும் தனிநபரும் அவற்றுடன் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.