ஆசியா-பசிபிக் பிரதேசம் அமைதியான வளர்ச்சி பகுதியாகும்: சீன வெளியுறவு அமைச்சகம்
2024-01-08 16:55:56

‘அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா’ ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தின. இதில் வெளியிடப்பட்ட கூட்டு ஆவணத்தில், சீனாவுடன் தொடர்புடைய பொருத்தமற்ற உள்ளடக்கம் குறித்து தீவிர கவலை தெரிவித்ததாக ஜனவரி 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார். ஒத்துழைப்பு என்ற பெயரில் சீனாவின் உள்விவகாரங்களில் தொடர்பான நாடுகளின் தலையீட்டை சீனா தீவிரமாக எதிர்க்கிறது. தற்போது தென் சீனக் கடலின் நிலைமை பொதுவாக நிலையாக இருக்கின்றது. பிராந்திய இறையாண்மையையும் கடல் உரிமைகள் மற்றும் நலன்களையும் சீனா எப்போதும் உறுதியாக பாதுகாத்து வருகிறது என்று தெரிவித்தார்.

அவர் கூறுகையில், தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை நான் வலியுறுத்துகிறேன். தைவான் பிரச்சினை சீனாவின் உள் விவகாரமாகும். வெளிப்புற சக்திகள் தலையிட கூடாது. தைவானின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணுவதற்காக, ஒரே சீனா கொள்கையைப் பின்பற்ற வேண்டும். தைவான் சுதந்திரத்தை உறுதியாக எதிர்க்க வேண்டும். ஆசியா-பசிபிக் பிரதேசம் அமைதியான வளர்ச்சி பகுதியாகும். பெரிய நாடுகளுக்கு இடையிலான போட்டி பகுதி அல்ல என்றும் தெரிவித்தார்.