செலவு ஒப்பந்தத்தில் அமெரிக்க இரு கட்சிகள் உடன்பாடு
2024-01-08 10:28:56

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சி தலைவர்கள், கூட்டாட்சி அரசு, குறிப்பிட்ட துறைகளில் முடக்க நிலையில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கும் வகையில், 1.59 இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள செலவு ஒப்பந்தத்தில் உடன்பாட்டைக் கண்டுள்ளனர் என்று பிரதிநிதிகள் அவையின் தலைவர் மைக் ஜோன்சன் 7ம் நாள் தெரிவித்தார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அனுப்பிய கடிதத்தில், 2023ம் ஆண்டின் அக்டோபர் முதலாம் நாள் முதல், 2024ம் ஆண்டின் செப்டம்பர் 30ம் நாள் வரை, இந்த ஒப்பந்தத்தில் செலவு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் 88 ஆயிரத்து 600 கோடி டாலர், தேசியப் பாதுகாப்புக்கும், 70 ஆயிரத்து 400 கோடி டாலர், மற்ற துறைகளின் செலவுக்கும் பயன்படுத்தப்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.