தமிழகத்தில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
2024-01-08 20:05:43

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அரசு அதிகாரி ஒருவர் சின்ஹுவா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

பல மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக தொடர் மழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. நாகப்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16.7 சென்டி மீட்டர் அளவும் காரைக்காலில் 12.2 சென்டி மீட்டர் அளவும் மழை பெய்ததாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.