அற்புதமான 24 சூரிய பருவங்கள்
2024-06-21 09:50:57

இந்த ஆண்டின் மிக நீண்ட பகல் நாளான கோடைக்கால சங்கிராந்தி இன்று (ஜூன் 21) நிகழ்கிறது. கோடைக்கால சங்கிராந்தி என்பது, சீனாவின் 24 சூரிய பருவங்கள் முறையில் சியா ஸி(xià zhì) என அழைக்கப்படுகிறது. 24 சூரிய பருவங்களின் அற்புதம் மற்றும் தனித்துவத்தை ஆவலுடன் அறிந்து கொள்ள விரும்பினால், கீழுள்ள இந்த காணொளியில் விரிவான விளக்கத்தைக் கண்டு ரசியுங்கள்.

சீன மொழியில் ஏர்ஷிஸி ஜியேச்சி(சீனம்: 二十四节气 ÈrshísìJiéqì)என அழைக்கப்படும் 24 சூரிய பருவங்கள் என்பது, சீனாவின் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. இது, சூரியனின் ஆண்டு இயக்கத்தின் அடிப்படையில், சீன மூதாதையர்கள் உருவாக்கிய நேர முறையாகும். இது உலக வானியல் வரலற்றில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு ஆகும். அத்துடன், சீனாவின் 5ஆவது பெரிய கண்டுபிடிப்பாகவும் திகழ்கிறது. தற்போது வரை இச்சூரிய பருவங்கள், வேளாண்மை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 24 சூரிய பருவங்கள், சூரியனின் ஆண்டு இயக்கத்தின் அடிப்படையில் சீன மூதாதையர்கள் உருவாக்கிய நேர முறையாகும். சர்வதேச வானிலை துறையில் சீனாவின் 5ஆவது கண்டுபிடிப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. இது, சீனப் பண்பாட்டின் சிறந்த பிரதிநிதியாகவும் முக்கிய அடையாளச் சின்னமாகவும் திகழ்கிறது.  2016ஆம் ஆண்டு, யுனெஸ்கோ பொருள்சாரா கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் இதைச் சேர்ந்தது. 

முன்னோர்கள், தரையில் ஒரு குச்சியை நிறுத்தி, நண்பகலில் அதன் நிழலை அளவீடு செய்தனர். நிழலின் நீளத்தின் படி, அடுத்தடுத்து, டொங் ஸி, சியா ஸி , ட்சுன் ஃபென், ச்சியு ஃபென் என 4 சூரிய பருவங்களாக அதனை பிரித்தனர். ஷாங் வசம்த்தில் 4 சூரிய பருவங்கள் மட்டும் உண்டு. ஜோவ் zhou  வம்சத்தில் 8 பருவங்களாக அதிகரித்தது.  பிறகு, ஓராண்டில் சூரியனின் இடமாற்றம் மற்றும் அதனால் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றுக்கு இணங்க, ஓராண்டு 24 பருவங்களாகப் பிரிக்கப்பட்டது. அது, 4 காலாண்டுகளில் காலநிலை மாற்றம் மற்றும் உயிரினங்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. இதுவே,  24 சூரிய பருவங்கள் ஆகும். இந்நிலையில், ஒவ்வொரு மாதத்திற்கும் 2 பருவங்கள் உள்ளன. மாதத்தின் தொடக்கத்தில் ஜியே எனவும், நடுப்பகுதியில் ச்சி எனவும் அழைக்கப்படும். எனவே, சீன மொழியில் இந்த நேர முறைக்கு ஜியேச்சி(சீனம்: 节气 Jiéqì)  என பொதுவாக அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நேர முறை விவசாய நடவடிக்கைகளுக்கு திசைகாட்டி போல உதவி வருகிறது. அதன் மூலமாக, விவசாயிகள், வசந்தகாலத்தில் சாகுபடி செய்தும், இலையுதிர் காலத்தில் அறுவடை செய்தும் வருகின்றனர். மேலும், நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களுக்கு வழிகாட்டலாகவும் உள்ளது.   

தொழில்நுட்பம் விரைவாக மேம்பட்டு வரும் இன்றைய காலத்தில், 24 சூரிய பருவங்கள் பயன்பாடு இன்னும் உள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றதா?இந்த நேர முறை மிகவும் அற்புதமானது. அது மிகவும் துல்லியமான முறையில் இயங்கி வருகிறது. தற்போது வரை, இது தொடர்ச்சியாக வேளாண்மை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி வருகிறது. இன்றயை காலத்தில், பழைய விவசாய பண்பாட்டிற்கு அப்பால், 24 சூரிய பருவங்கள், சீன மக்களின் ஆடை, உணவு, வசிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒன்றிணைந்துள்ளது. பருவகால உணவு முறை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம், பருவநிலை மாற்றம் மக்களுக்கு நினைவூட்டப்பட்டு வருகிறது. பருவகால உணவு பற்றிய பழக்க வழக்கம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இது சீன மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத அம்சமாக மாறியுள்ளது.  சீனர்களை பொறுத்த வரை, 24 சூரிய பருவங்கள், ஒரு பாரம்பரிய பொது அறிவு ஆகும். இயற்கைக்கு மரியாதை அளித்து, இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது என்ற சீனர்களின் தத்துவத்தை அது எதிரொலிக்கிறது. அத்துடன், சீனர்களின் சிந்தனைகள் மற்றும் சமூக நடைமுறைகள் மீது சூரிய பருவங்களின் தாக்கம் ஆழாக உள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.