சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை:323800 கோடி டாலர்
2024-01-08 14:01:43

சீனத் தேசிய அன்னிய செலாவணிப் பணியகம் 2023ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதியில் கையிருப்பில் உள்ள அன்னிய செலாவணி பற்றிய புள்ளிவிவரங்களை இவ்வாண்டின் ஜனவரி 7ஆம் நாள் வெளியிட்டது. இப்புள்ளிவிவரங்களின் படி, 2023ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 3 இலட்சத்து 23 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலராகும். இது, 2023ஆம் ஆண்டின் நவம்பர் இறுதியில் இருந்ததை விட 6 ஆயிரத்து 620 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து 2.1 விழுக்காட்டு உயர்வை எட்டியுள்ளது.

எதிர்காலத்தைப் பார்க்கும்போது, சீனப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. உயர்தர வளர்ச்சியைப் பயனுள்ள முறையில் முன்னேற்றுவது, அன்னிய செலாவணி கையிருப்பு தொகையின் அடிப்படை நிதானத்துக்கு ஆதரவை வழங்கும் என்று சீனத் தேசிய அன்னிய செலாவணிப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதைத் தவிர, புள்ளிவிவரங்களின் படி, 2023ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதி வரை, சீனாவின் தங்கக் கையிருப்பு தொகை 7 கோடியே 18 இலட்சத்து 70 ஆயிரம் அவுன்ஸ் ஆகும். சீனாவின் தங்கக் கையிருப்புத் தொகை கடந்த 14 மாதங்களில் அதிகரித்துள்ளது.