போர் நிறுத்தம் குறித்து வேண்டுகோள் விடுத்த சீனா
2024-01-08 16:24:05

காசா பிரதேசத்தின் தென்மேற்குப் பகுதியின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல் ஜசீரா தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து அந்நிலையம் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஏ எஃ பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவரும் தாக்குதலில் உயிரிழந்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

இந்த இரு செய்தியாளர்களின் உயிரிழப்புக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். பாலஸ்தீன-இஸ்ரேல் போர் கடந்த 3 மாதங்களாக  நடைபெற்று வருகிறது.  இப்போரில் காசா பிரதேசத்தில் மட்டும் 23 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 100க்கு மேலான செய்தியாளர்களும் உயிரிழந்தனர். போரை நிறுத்த வேண்டும் எனச் சர்வதேச சமூகம் இடைவிடாமல் வேண்டுகோள் விடுத்த போதிலும், போர் இன்னும் தொடர்கின்றது. தொடர்புடைய தரப்புகள் குறிப்பாக இஸ்ரேல், தன்னடக்கத்துடன் செயல்பட்டு, ஐ.நாவின் தொடர்புடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி, போர் நிறுத்தத்தை மேற்கொண்டு, அப்பாவி மக்களைப் பேணிக்காக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாகக் குறிப்பிட்டார்.