சீனாவின் ஆக்கத் தொழில் துறையின் அதிகரிப்பு வேகம்
2024-01-08 14:57:24

புத்தாண்டு துவக்கத்தின் போது, சீனாவில் பல தொழில் நிறுவனங்கள் முன்பதிவுப் படிவங்களை நிறைவேற்றி, சுறுச்சுறுப்பாக புத்தாக்கம் செய்து வருகின்றன. இதனால், சீனாவின் ஆக்கத் தொழில் துறையின் அதிகரிப்புக்கான உள்ளார்ந்த ஆற்றல் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில், சீனாவின் ஆக்கத் தொழில் துறையின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு முன்மதிப்பீட்டு அளவு 55.9 விழுக்காட்டை எட்டி, 3 மாதகாலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதோடு, சந்தையின் வளர்ச்சி மீதான நம்பிக்கையை ஆக்கத் தொழில் நிறுவனங்கள் வலுப்படுத்தி வருகின்றன.

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில், ஆக்கத் தொழில் துறையின் முக்கியத் தொழில் சங்கிலியின் உயர் தரமுள்ள வளர்ச்சி செயல்கள் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். புதிதாக வளரும் தொழில் துறையும் பெரிதும் வளர்க்கப்படும். புதிய எரியாற்றல், புதிய மூலப் பொருட்கள், உயர் நிலை சாதனங்கள் முதலிய தொழில்கள் பெருமளவில் மேம்படுத்தப்படும். எதிர்கால தொழில் துறை வளர்ச்சி செயல் திட்டமும் வகுக்கப்படும். இத்தகு முயற்சிகளினால் சீன ஆக்கத் தொழில் துறையின் புதிய வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றல் மேலும் விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.