வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி
2024-01-08 10:37:30

வங்காளதேசத்தின் 12ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஜனவரி 8ஆம் நாள் வெளியிடப்பட்டது. முதல் கட்ட முடிவின் படி, நடப்பு தலைமையமைச்சர் ஷேக் ஹசீனா அம்மையார் தலைமையிலான வங்காளதேச அவாமீ லீக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

வங்காளதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குரிய தொகுதிகளில் இருந்து நேரடித் தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வங்காளதேசத்தில் மொத்தமுள்ள 300 இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பெறும் கட்சியானது, புதிய அரசை உருவாக்கி தலைமையமைச்சரை நியமிக்கும்.