சீனாவின் செமிகண்டக்டர் தயாரிப்பு மீதனா அமெரிக்காவின் அடக்குமுறை: சீனா
2024-01-08 19:55:56

அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு என்பதை சாக்குப்போக்காகக் கொண்டு, சீனாவுக்கு சில்லுகள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய தடைக் கட்டுபாட்டை தொடர்ந்து அதிகரித்து, சீனாவின் செமிகண்டக்டர்கள் தயாரிப்புத் தொழில்நிறுவனங்கள் மீது காரணமின்றி ஒடுக்கி வருகின்றது. இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 8ஆம் நாள் கூறுகையில்,

அமெரிக்காவின் இந்தச் செயல்கள், பொருளாதார அடக்குமுறை என்று தெரிவித்தார்.

சீனாவுக்கு செமி கண்டக்டர் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை செய்வது, சீனா மீதான பாகுபாட்டு தன்மை வாய்ந்த செயலாகும். இது, ஜி.ஏ.டி.டி என்ற கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்துக்கான பொது ஒப்பந்தத்தின் கீழ் உள்ள முதலாவது விதியை மீறியுள்ளது. சீனாவில் தயாரிக்கப்படும் தொலைதொடர்பு சாதனங்கள் அமெரிக்கச் சந்தைக்குச் செல்வதை அமெரிக்கா தடை செய்கிறது. இது, ஜி.ஏ.டி.டி ஒப்பந்தத்தின் 11ஆம் விதியை மீறுவதாகும். மேலும், அமெரிக்காவின் தடை ஆணைகள், தொழில் நுட்பம் ரீதியிலான வர்த்தக தடை பற்றிய உடன்பாட்டை மீறியுள்ளன. சர்வதேச விதிகளை வாயில் வைத்து சொல்லும் அமெரிக்கா, செயலில் விதிகளை மீறி வருகின்றது என்று மாவ் நிங் குறிப்பிட்டார்.