2023ஆம் ஆண்டில் சீனாவின் அஞ்சல் துறையின் சரக்கு சேவை
2024-01-09 10:23:36

சீனத் தேசிய அஞ்சல் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில், சீனாவின் அஞ்சல் துறையின் தபால் சேவை எண்ணிக்கை மற்றும் அஞ்சல் துறை வருமான தொகை முறையே 16 ஆயிரத்து 200 கோடியாகவும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானாகவும் இருந்தன. இவை, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16.5 விழுக்காடாகவும் 13.5 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளன. இதில் தூதஞ்சல் சேவை எண்ணிக்கை மற்றும் சேவையின் வருமான தொகை முறையே 13 ஆயிரத்து 200 கோடியாகவும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கோடி யுவானாகவும் இருந்தன. அவை, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 19.5 விழுக்காட்டாகவும் 14.5 விழுக்காட்டாகவும் அதிகரித்துள்ளன.