பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பிரதேச நாடுகளுடன் ஈரான் ஒத்துழைப்பு
2024-01-09 10:36:40

கெர்மன் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம், அமெரிக்க-ஈரான் உறவு, பிரதேச சூழ்நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனனி ஜனவரி 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.

அவர் கூறுகையில், பயங்கரவாதம் முழு உலகத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அதி தீவிர அமைப்புகளின் எஞ்சிய சக்திகள், ஈரான் உள்ளிட்ட பிரதேச மக்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரதேச நாடுகளுடன் ஈரான் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பயங்கரவாதத்தைக் கூட்டாக ஒடுக்கும் என்றார்.