சீனாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு தொடர்ச்சியான அதிகரிப்பு
2024-01-09 15:39:04

2023ஆம் ஆண்டு, சீனாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 20.8 கோடி டன்னை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 30 லட்சம் டன்னுக்கு மேலாக அதிகரித்துள்ளது.

கடல் பகுதி கச்சா எண்ணெய் உற்பத்தித் தொகை 6 கோடியே 20 லட்சம் டன்னைத் தாண்டியுள்ளது. இவ்வுற்பத்தித் தொகையின் அதிகரிப்பு, தொடர்ந்து 4 ஆண்டுகளாக நாட்டின் மொத்த அதிகரிப்பு அளவில் 60 விழுக்காட்டுக்கும் மேலாக வகித்துள்ளது. ஷேல் எண்ணெய் அகழ்வுப் பணி சீராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இயற்கை எரிவாயு உற்பத்தி அளவு 23 ஆயிரம் கோடி கன மீட்டரை எட்டி, தொடர்ந்து 7 ஆண்டுகளாக 1000 கோடி கன மீட்டர் அளவில் அதிகரித்து வந்துள்ளது.