வளரும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் கருத்து
2024-01-11 20:14:11

வளரும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பைப் பலப்படுத்தப்படுவதே, உலகின் வளர்ச்சியை முன்னேற்றவும் சர்வதேச ஒழுங்கைப் பேணிக்காக்கவும் துணைபுரியும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 11ஆம் நாள் தெரிவித்தார்.

அண்மையில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில், கடந்த ஓராண்டில், சீனாவுடனான உறவு மேம்பாடு அடைந்துள்ள 17 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், பெரும்பாலாவை வளரும் நாடுகளாக உள்ளன. அமெரிக்காவின் தூதாண்மை நெடுநோக்கு திட்டத்துக்கு மாறாக, உலகளவில் அதிகமான மக்கள் தொகை கொண்ட வளரும் நாடுகளுடனான உறவை நெருக்குவதில் சீனா செயல்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவ்நிங் மேலும் கூறுகையில், வெளியுறவை வளர்ப்பதில் சீனா அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துவதோடு, ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் உறவை வளர்க்கிறது என்றும் தெரிவித்தார்.