ஏமனில் ஹூதி ஆயுதக் குழு மீது அமெரிக்காவும் பிரிட்டனும் வான் தாக்குதல்
2024-01-12 10:11:38

ஹூதி கட்டுப்பாட்டிலுள்ள பல பகுதிகளின் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் படைகள், ஏமன் உள்ளூர் நேரப்படி 12ஆம் நாள் விடியற்காலை தாக்குதல் நடத்தின.

ஏமன் நாட்டிலுள்ள ஹூதியுடன் தொடர்புடைய இலக்குகளின் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலை நடத்தத் தொடங்கியுள்ளன என்று அமெரிக்க உள்ளூர் நேரப்படி 11ஆம் நாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் இறுதி முதல் இது வரை, செங்கடல் மீது ஹூதி ஆயுதக் குழு தாக்குதலை நடத்திய பிறகு, ஹூதி மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலை நடத்துவது இது முதன்முறையாகும்.