லியு ஜியன்சாவ்-பிளிங்கன் சந்திப்பு
2024-01-13 19:48:01

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்பு துறை அமைச்சர் லியு ஜியன்சாவ் ஜனவரி 12ஆம் நாள் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டோனி பிளிங்கனுடன் Antony Blinken சந்திப்பு நடத்தினார். பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை  தொடர்ந்து வலுப்படுத்தி, சான் ஃப்ரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய பொது கருத்து மற்றும் சாதனையைச் செயல்படுத்துவதை முன்னேற்ற வேண்டும் என்று இரு தரப்பினரும் தெரிவித்தனர். இரு தரப்பும் ஒரே திசையை நோக்கி முன்னேறி, இரு நாட்டுறவின் சீரான தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று லியு ஜியன் சாவ் வலியுறுத்தினார். சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பற்றியும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.