யேமனின் மீதான வான் தாக்குதல்களை நடத்த எந்த நாட்டிற்கும் ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானம் அங்கீகாரம் அளிக்கவில்லை:ரஷியா
2024-01-15 15:40:56

ஐ.நா. பாதுகாப்பு அவை அண்மையில் ஏற்றுக்கொண்ட செங்கடல் நிலைமை பற்றிய தீர்மானம் யேமனின் மீது வான் தாக்குதல்களை நடத்த எந்த நாட்டிற்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஸாகரோவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செங்கடலில் வணிகக் கப்பல்களைத் தாக்கிய யேமனின் ஹுடி ஆயுதப்படைகளை ஐ.நா. பாதுகாப்பு அவை 10ஆம் நாள் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவித்தது.