புது தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
2024-01-15 18:02:09

புது தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டைத் தடுக்கும் விதம் மூன்றாவது கட்ட வரையறுக்கப்பட்ட எதிர் நடவடிக்கைத் திட்டத்தை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தியது. இதன்படி, தலைநகரில் கல் உடைக்கும் இயந்திரம், சுரங்கப் பணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டிட இடிப்பு பணிகளுக்கு உறுதியாக தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிஎஸ் 3 ரக பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 ரக டீசல் வாகனங்கள் பயன்பாட்டுக்கும் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு உள்ளூர் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.