சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கிய நவ்ரு
2024-01-15 17:18:53

தைவானுடன் உறவைத் தூண்டிப்பதாக நவ்ரு அரசு அறிவித்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனவரி 15ஆம் நாள் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை நவ்ரு ஏற்றுக்கொண்டு, தைவானுடன் கூறப்படும் “ தூதாண்மை உறவைத்” தூண்டித்து, சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்குவதற்கு சீனா பாராட்டு மற்றும் வரவேற்பைத் தெரிவிக்கிறது என்றார்.

உலகத்தில் ஒரே ஒரு சீனா உள்ளது. தைவான், சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில், 182 நாடுகளுடன் சீனா தூதாண்மை உறவை உருவாக்கியுள்ளது. இந்த அடிப்படையில் நவ்ருவுடன் இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.