சீனாவும் எகிப்தும் ஒத்த கருத்துகளை எட்டுதல்
2024-01-15 15:39:32

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜனவரி 14ஆம் நாள், கெய்ரோவில் எகிப்தில் பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சமேஹ் ஹசன் ஷூக்ரியுடன் சந்திப்பு நடத்தினார். காசா நெருக்கடி உள்ளிட்ட பாலஸ்தீன பிரச்சினை, பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் முதலியவை குறித்து இரு தரப்பினரும் சில ஒத்த கருத்துக்களை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.