உலக 2024 தாவோஸ் ஆண்டு கூட்டத்தொடர் துவக்கம்
2024-01-16 10:46:21

உலக 2024 தாவோஸ் ஆண்டு கூட்டத்தொடர் ஜனவரி 15ஆம் நாள், ஸ்விட்சர்லாந்தில் தொடங்கியுள்ளது. நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவது என்பது இதன் தலைப்பாகும். பொருளாதார வளர்ச்சி, காலநிலை மற்றும் இயற்கை செயல் நடவடிக்கைகள் முதலியவை குறித்து இதில் கலந்துகொண்டோர் ஆழமாக விவாதித்து, ஒத்துழைப்புகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாண்டு கூட்டத்தொடரில், 60க்கு மேலான நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 2800 பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்துள்ளனர்.