டோகோ அரசு தலைவர் ஃபாரே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்திப்பு
2024-01-18 14:23:08

ஜனவரி 17ஆம் நாள், டோகோ அரசு தலைவர் ஃபாரே க்னாசிங்பே லோமில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீயைச் சந்தித்தார்.

சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு தனது நல்வாழ்த்துக்களை ஃபாரே வாங் யீயிடம் தெரிவித்தார். அவர் இருநாட்டு உறவு மற்றும் நடைமுறை ஒத்துழைப்பைப் பற்றி பெரிதும் பாராட்டினார். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் கட்டமைப்பில், ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. டோகோ எப்போதும் சீனாவுக்கு நம்பிக்கை அளிக்கும். தற்போது உலகில் நிலைமை நிச்சயமற்றதாக உள்ளது. ஆப்பிரிக்காவின் அமைதியான வளர்ச்சி புதிய சவால்களை எதிர்கொள்கிறது. சீனாவின் ஆதரவு மற்றும் ஆப்பிரிக்க-சீன ஒத்துழைப்பை வலுப்படுத்துதலை ஆப்பிரிக்கா இன்னும் அதிகமாகத் தேவைப்படுத்துகிறது என்று ஃபாரே தெரிவித்தார்.

சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்கின் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்த வாங் யீ, சீன-டோகோ நட்புறவு தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளதாக தெரிவித்தார். சீனா டோகோவுடன் வளர்ச்சி உத்தி நோக்குகளின் பரிமாற்றங்களை வலுப்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சியை அடைவதில் டோகோவை ஆதரிக்கும். சீனா எப்போதும் ஆப்பிரிக்காவை உறுதியாக ஆதரித்து, மேலதிக சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பின் சாதனைகளை டோகோ மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயனளிக்கும் என்று வாங் யீ தெரிவித்தார்.