சீனத் தேசியப் பொறியியலாளர் பரிசு வழங்குதல்
2024-01-19 11:10:09

ஜனவரி 19ஆம் நாள், சீனத் தேசியப் பொறியியலாளர்களுக்குப் பரிசு வழங்குதல் கூட்டம் பெய்ஜிங் மாநகரில் உள்ள மக்கள் மகாமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 81 பொறியியலாளர்களுக்குச் சீனாவின் தலைசிறந்த பொறியியலாளர் எனும் பரிசு வழங்கப்பட்டது. 50 குழுக்களுக்குச் சீனத் தேசிய பொறியியலாளர் குழு எனும் கௌரவம் வழங்கப்பட்டது.

பொறியியல் அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கான புத்தாக்கத்தை விரைவுபடுத்தும் முக்கிய நபர்களாகப் பொறியியலாளர்கள் விளங்குகின்றனர். அதோடு, அவர்கள் சீனத் தேசிய நெடுநோக்கு திறமைசாலி ஆற்றலுக்கான முக்கிய பகுதியாகவும் திகழ்கின்றனர்.

இவ்வாண்டில், சீனத் தேசியப் பொறியியலாளர்களுக்கான பரிசு வழங்குதல் கூட்டம் நடைபெறுவது என்பது இதுவே முதன்முறையாகும்.