உலகத்தின் மிகப் பெரிய இணைய வழி சில்லறை விற்பனை சந்தையான சீனா
2024-01-19 18:38:01

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புதிய தகவலின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவில் இணைய வழி சில்லறை விற்பனையின் மொத்த தொகை 15 லட்சத்து 42 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 11 விழுக்காடு அதிகரித்து, கடந்த 11 ஆண்டுகளாக உலகத்தின் மிகப் பெரிய இணைய வழி சில்லறை விற்பனை சந்தையாக விளங்குகிறது.

முதலாவதாக, இணைய வழி உண்மை பொருட்களின் விற்பனை புதிய சாதனையைப் பெற்றுள்ளது. நுகர்வை விரிவுபடுத்திய புதிய இயக்காற்றல் மேலும் வலிமையானது.

இரண்டாவதாக, இணைய வழி சேவையின் நுகர்வு மேலும் பல தரப்பட்டவை. சுற்றுலா, பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு, உணவு ஆகியவற்றின் இணைய வழி விற்பனை, மொத்தத் தொகையில் 23.5 விழுக்காடு வகித்துள்ளது.

மூன்றாவதாக, எண்ணியல் பொருளாதாரத்துக்கும் உண்மை பொருளாதாரத்துக்குமிடையிலான ஒன்றிணைப்புக்கான வழிமுறைகள் மேலும் செழுமையானவை. தொழில் துறையின் மின்னணு வணிக அலுவல் திறன் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, சீனாவின் “பட்டுப்பாதை மின்னணு வணிக அலுவல்” திட்டப்பணியின் கூட்டாளி நாடுகளின் எண்ணிக்கை 30. இதற்கான ஷாங்காய் முன்மாதிரி மண்டலத்தின் 34 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. சர்வதேச ஒத்துழைப்புகள் மேலும் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.