ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விமான விபத்தில் 4 பேர் உயிர் பிழைப்பு
2024-01-22 10:39:34

விபத்துக்குள்ளாகிய ரஷியாவின் ஃபால்கன்-10 ரக ஜெட் விமானத்தை, ஆப்கானிஸ்தானின் மீட்புதவிப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்தனர். இவ்விமானத்தில் பயணம் செய்த 6 பேரில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 2 பேரின் நிலைமை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று ரஷிய விமானப் போக்குவரத்து பணியகம் ஜனவரி 21ம் நாள் தெரிவித்தது.

ஜனவரி 21ம் நாள் அந்நாட்டின் படக் ஷான் மாநிலத்தின் மலை பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம், தொழில் நுட்பக் குழுவினால் கண்டறியப்பட்டது. அதில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசின் போக்குவரத்து மற்றும் பயணியர் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.